உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வட்டார கல்வி அலுவலகம் முன்பு முட்புதர் அகற்றம்

வட்டார கல்வி அலுவலகம் முன்பு முட்புதர் அகற்றம்

திருவாடானை : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக திருவாடானையில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு முட்புதர்கள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.திருவாடானை தாலுகா அலுவலகம் முன்பு வட்டார கல்வி அலுவலகம் உள்ளது. அலுவலகம் முன்புள்ள இடத்தில் செடிகள் அடர்ந்து சீமைக்கருவேலம் வளர்ந்து முட்புதராக இருந்தது. இதனால் விஷ ஜந்துகள் தங்கும் இடமாக மாறியதால் அங்கு பணிபுரியும் அலுவலர்கள் அச்சமடைந்தனர்.இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக சீமைக்கருவேலம் உள்ளிட்ட செடிகள் அகற்றப்பட்டு பளீச் என சுத்தம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ