கிழக்கு கடற்கரை சாலையோரம் முள்மரங்களை அகற்றுங்க வாகன ஓட்டிகள் பீதி
திருப்புல்லாணி: திருப்புல்லாணியில் இருந்து கீழக்கரை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல முள் மரங்களால் விபத்து அபாயம் தொடர்கிறது.கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறங்களிலும் நிழல் தரும் மரக்கன்றுகளை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்தனர். முறையான பராமரிப்பு இல்லாததால் பெரும்பாலான மரங்கள் மாயமாகி தற்போது குறைந்த எண்ணிக்கையிலேயே இரு புறங்களிலும் நிழல் தரும் மரங்கள் உள்ளன.கிழக்கு கடற்கரை சாலையோரம் வெள்ளைக்கோட்டை தாண்டி முள் மரங்கள் வெளியே நீட்டி கொண்டிருப்பதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் ஒதுங்கி செல்லும் போது டூவீலர் ஓட்டிகள் முள் மரங்களில் சிக்கி காயமடைகின்றனர்.எனவே நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் உரிய முறையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி நிழல் தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்து முறையாக பராமரித்தால் இச்சாலை பசுமைவழிச் சாலையாக மாறும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.