உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரைக்குடி - -திருவாரூர் ரயிலை  ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை

காரைக்குடி - -திருவாரூர் ரயிலை  ராமேஸ்வரம் வரை நீட்டிக்க கோரிக்கை

ராமநாதபுரம் : காரைக்குடியில் இருந்து இயக்கப்படும் திருவாரூர் ரயில் வாரத்தில்ஏழு நாட்களும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன.இந்த ரயிலை காரைக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும், என ரயில்வே பயணிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூரில் இருந்து இந்த ரயில் காலை 6:20க்கு புறப்பட்டு காலை 9:35 க்கு காரைக்குடி வந்தடையும். மறுமார்க்கத்தில் காரைக்குடியிலிருந்து மாலை 6:00மணிக்கு புறப்பட்டு இரவு 9:25 மணிக்கு திருவாரூரை சென்றடையும். வாரத்தில் ஏழு நாட்களும் இந்தரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் காலை 9:34 மணியில் இருந்து மாலை 6:00மணிவரை காரைக்குடியில் வீணாக நிற்கிறது. அந்தநேரத்தில் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். இதனால் சிவங்கை, மானாமதுரை, பரமக்குடி, வழியாக ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் பயணிகள் பயன் பெறுவார்கள்.ராமநாதபுரம் வழக்கறிஞர்கள் சங்க துணைத்தலைவர் மாதவன் கூறுகையில், ராமநாதபுரம், ராமேஸ்வரம் புண்ணிய தலங்கள்இருந்தும் இந்தப்பகுதிக்கு கூடுதல் ரயில்கள் விடப்படுவதில்லை. எனவே காரைக்குடி ரயில் நிலையத்தில் சும்மா நிற்கும் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ