உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடுக்கில் சிக்கிய பசு மீட்பு

இடுக்கில் சிக்கிய பசு மீட்பு

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஓரிக்கோட்டையில், மேய்ச்சலுக்காக சென்ற பசு மாடு, இரு வீடுகளுக்கு இடையே உள்ள சிறிய சந்து வழியாகச் சென்றபோது சிக்கிக் கொண்டது; நீண்ட நேரம் வெளியே வர முடியாமல் தவித்தது. அதை அறிந்த அப்பகுதி மக்கள், மாட்டை மீட்க முயன்றனர்.எனினும், முடியாததால், திருவாடானை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்தனர். வீரர்கள் வந்து பல மணி நேரம் போராடி, பசுவை கயிறு கட்டி சிறிது சிறிதாக இழுத்து, உயிருடன் மீட்டனர். வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை