உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் தொடர் குளறுபடி குறைகளுக்கு தீர்வு காணுங்கள்

மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சியில் தொடர் குளறுபடி குறைகளுக்கு தீர்வு காணுங்கள்

கீழக்கரை: -மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சிகளில் குளறுபடியால் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. கீழக்கரை தாலுகாவில் உத்தரகோசமங்கை, கீழக்கரை, திருப்புல்லாணி ஆகிய மூன்று உள்வட்ட வருவாய் பகுதியில் 28 வருவாய் கிராமங்களுக்கும் மே, ஜூன் மாதங்களில் ஜமாபந்தி என்ற கிராம கணக்கு தீர்வு நடந்தது. நடப்பு ஆண்டில் ஜூன் இரண்டாம் வாரத்தில் துவங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட பட்டா, சிட்டா கேட்டு மனுக்கள் பெறப்பட்டன. ஆனால் பலருக்கும் இதற்கான தீர்வு முறையாக கிடைக்கவில்லை. இந்நிலையில் நடந்த இரு நாட்களுக்கு முன்பு மாயாகுளம் சமுதாய கூடத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் நடந்தது. இது கலந்து கொண்ட அப்பகுதி மக்கள் மகளிர் உதவித் தொகை கேட்டும், குடிநீர் வேண்டியும், ஆக்கிரமிப்பு நில சம்பந்தப்பட்ட பட்டா வேலைகள் குறித்து 370-க்கும் மேற்பட்ட மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்டதும் ஆன்லைனில் பதிவு செய்து சம்பந்தப்பட்ட மனுதாரரின் அலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டது. மாயாகுளம் ஊராட்சியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:பட்டா சம்பந்தமான மனு அளித்தவர்கள் கீழக்கரை தாலுகா அலுவலகம் சென்று கேட்டோம். அதற்கு நிகழ்ச்சி நடக்கும் அன்றே ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பித்திருந்தால் தான் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பயன்பெற முடியும். இல்லையெனில் திட்டத்தில் சேர முடியாது.எப்போதும் போல மீண்டும் மனு செய்து வாருங்கள். வரிசைப்படி இரண்டொரு மாதம் கழித்து நாங்கள் போன் செய்வோம். அப்போது வந்து பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சியில் மனு அளித்தும் ஆன்லைன் மெசேஜ் வந்தது. அதை வைத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஜெராக்ஸ் கடை கூட இல்லை. ஒரு கி.மீ., தள்ளி சென்று எடுக்க வேண்டி இருந்தது. மீண்டும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என முகாம் நடக்கும் போதே சொல்லி இருந்தால் 22 கி.மீ.,ல் உள்ள ராமநாதபுரம் சென்று ஆன்லைனில் பதிவு செய்திருப்போம்.மதியம் 3:00 மணி வரை மட்டுமே மனுக்கள் பெறப்பட்டது. 5:00 மணிக்கு மேல் இ--சேவை மையங்கள் செயல்படுவதில்லை. இந்நிலையில் இது எப்படி சாத்தியமாகும். எனவே குளறுபடிகளை நிவர்த்தி செய்யவும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த்துறையினர் முன்வர வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை