உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கச்சத்தீவு திருவிழா செல்வோருக்கு கட்டுப்பாடு

கச்சத்தீவு திருவிழா செல்வோருக்கு கட்டுப்பாடு

ராமேஸ்வரம்:கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்வோர் நகை, பணம் எடுத்துச் செல்ல சுங்கத்துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.கச்சத்தீவு திருவிழாவுக்கு மார்ச் 14ல் ராமேஸ்வரத்தில் இருந்து படகில் செல்ல பலர் பதிவு செய்து உள்ளனர். அவர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து சுங்கத்துறையினர் வெளியிட்ட அறிக்கை:பெண், ஆண்கள் 50,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் அணிந்திருக்கலாம். அதற்கு மேல் இருந்தால் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். 25,000 ரூபாய் கொண்டு செல்லலாம். அசல் புகைப்பட அடையாள அட்டையும், அரசு ஊழியர்கள் தடையில்லா சான்றும் கொண்டு வர வேண்டும்.எந்த பொருளையும் வியாபாரம், லாப நோக்கத்துடன் எடுத்துச் சொல்லவோ, கொண்டு வரவோ கூடாது. கச்சத்தீவில் இருந்து வரும் போது பொருள்களை மறைத்து வைத்தால் தண்டனைக்குரிய குற்றமாகும். 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.பழங்கள், விதைகள், தாவரங்கள், விலங்குகள், பாலிதீன், பிளாஸ்டிக் பொருள்களை எடுத்துச் செல்லக் கூடாது என தெரிவித்துள்ளனர்.நேற்று ராமேஸ்வரத்தில் படகுகள் நிறுத்தும் பாலத்தில் கச்சத்தீவு செல்வோருக்கான வசதி, பாதுகாப்பு அம்சம் குறித்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், இந்திய கடற்படை, சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.மேலும் மார்ச் 12 முதல் 15 வரை ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை