உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வீட்டருகே தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

வீட்டருகே தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துார் பேரூராட்சி பஜார் தெருவில் வீடுகளுக்கு அருகே குளம் போல் தேங்கும் கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.முதுகுளத்துார் பேரூராட்சி 7வது வார்டுக்கு உட்பட்ட பஜார் தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் செல்வதற்காக கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணி மட்டும் செய்யப்பட்டு வந்தது. இதில் முறையாக கழிவுநீர் செல்லாததால் சரவணப் பொய்கை ஊருணி அருகே தொட்டி கட்டப்பட்டு அதில் தேக்கி வைத்து கழிவுநீரை மோட்டார் வைத்து பேரூராட்சி பணியாளர்கள் வெளியேற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக முறையாக கழிவுநீர் செல்லாததால் வீடுகளுக்கு அருகே குளம் போல் தேங்கி நிற்கிறது. இங்கு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருவதால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களை திரட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி