உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சூறாவளியால் தனுஷ்கோடி நெடுஞ்சாலையை மூடிய மணல்

சூறாவளியால் தனுஷ்கோடி நெடுஞ்சாலையை மூடிய மணல்

ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வீசிய சூறாவளிக்காற்றால் தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் மணல் மூடியுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்து சில நாட்களாக இப்பகுதியில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. இதனால் தனுஷ்கோடி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து வருகின்றன. மேலும் சூறாவளி காற்றால் தனுஷ்கோடி கடலோரம் குவிந்துள்ள மணல் காற்றில் கலந்து தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் குவியலாக பரவி மூடியுள்ளது.இவற்றை அகற்றி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காமல் உள்ளதால் ஆட்டோ, டூவீலர்களில் செல்வோர் மணலில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. ரோட்டிலுள்ள மணல் குவியலை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ