பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் அறிஞர் அண்ணா நகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது.ராமநாதபுரம் நகராட்சித்தலைவர் கார்மேகம், வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், நகராட்சி கவுன்சிலர்கள் காயத்திரி, ராமநாதன் மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார்.பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர், துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் என அனைத்து உறுப்பினர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். நகராட்சித்தலைவர் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.--பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்தனர். ஆசிரியர் குணசேகரன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். ஆசிரியர் சாகுல்மீரா நன்றி கூறினார்.