உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு

கடலில் கூண்டுகள் வைத்து மீன்பிடிப்பு

கீழக்கரை: தீவுகளை ஒட்டிய பகுதிகளில் மீனவர்கள் கூண்டுகள் வைத்து மீன் பிடித்து வருகின்றனர்.மூன்று அடி அகலத்திலும் ஒன்றரை அடி உயரத்திலும் பிளாஸ்டிக் வலைகளால் நான்குபுறங்களிலும்அடைக்கப்பட்டு அவற்றின்ஒரு புறத்தில் திறப்பு வைத்து இரையாக மீன்களை வைத்து அவற்றை கடலுக்குள் இறக்கி மீன் பிடித்து வருகின்றனர். கீழக்கரை மீனவர்கள் கூறியதாவது:கூண்டு வைத்து மீன் பிடிக்கும் போது ஏராளமான மீன்கள் சிக்குகின்றன. தீவுக்கு சற்று தொலைவில் ஆழம் குறைவான பகுதிகளில் இறால் மீன்களின் தலைப்பகுதியை வெட்டி கூண்டுக்குள் போடுகிறோம். அதனை உண்பதற்காக வரும் மீன்கள் மற்றும் நண்டுகள் கூண்டு வலையில் சிக்குகின்றன. மறுநாள் நாட்டுப்படகில் சென்று கூண்டுகளை எடுக்கும் போது மீன்கள் கிடைக்கின்றன என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ