உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே 800 மீ., நீளத்திற்கு கடல் பாறை

கீழக்கரை ஜெட்டி பாலம் அருகே 800 மீ., நீளத்திற்கு கடல் பாறை

கீழக்கரை,- கீழக்கரை மன்னார் வளைகுடா கடற்கரையில் கடலில் இருந்து 150 மீ.,ல் இயற்கையாகவே 800 மீ., நீளத்திற்கு ஆழம் குறைந்த நிலையில் கடல் பாறை உள்ளது.கடல் சீற்றம் காலங்களில் கடல்பாறை பெரும்பாலும் வெளியே தெரிவதில்லை. கடல் அலைகள் குறைந்த நேரத்தில் நீள்வாக்காக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி 800 மீ., நீளத்திற்கு கடல் பாறை உள்ளது.நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் அதன் இடைவெளி அறிந்து சேதமில்லாமல் அதனை கணக்கிட்டு கடக்கின்றனர். எவ்வளவு பேரலை ஏற்பட்டாலும் அந்த கடல் பாறையில் மோதி பின்னர் கரையை நோக்கி வருவது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.கடலுக்குள் இயற்கையாக உள்ள கடல் பாறையை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை