மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
11 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
11 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
11 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
11 hour(s) ago
பரமக்குடி:-பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் அதிகாரிகளுடன் மணல் கடத்தலை தடுக்க களமிறங்கிய நிலையில் மணல் கடத்தல் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.பரமக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சட்ட விரோதமாக மணல் கடத்தல் நடக்கிறது. பரமக்குடி அருகே எஸ்.காவனுார், தென்பொதுமக்குடி, தோளூர், விளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது.இதையடுத்து ஜூன் 28 மாலை முதல் இரவு வரை பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர் கிராமங்களில் வாகன சோதனை மேற்கொண்டார். உடன் தாசில்தார் சாந்தி, பரமக்குடி டி.எஸ்.பி., சபரிநாதன், துணை தாசில்தார் ஐயப்பன், ஆர்.ஐ., வேம்புராஜ், வி.ஏ.ஓ.,க்கள் விஜயராகவன், இளங்கோ, சரவணன் சென்றனர்.அப்போது மணல் கடத்தலில் தொடர்புடைய டிப்பர் லாரி கைப்பற்றப்பட்டு பரமக்குடி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago