உள்ளூர் செய்திகள்

ஓரியூரில் தேர்பவனி

திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அருளானந்தர் சர்ச்சில் அருளானந்தர் புனிதர் பட்டம் பெற்ற 77ம் ஆண்டு விழா ஜூன் 20ல் கொடியேற்றத்துடன்துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. மெக்கேல் அதிதுாதர், ஆரோக்கிய அன்னை, புனித அருளானந்தர் ஆகிய மூன்று தேர்கள் வலம் வந்தது. முன்னதாக பாதிரியார் ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை