உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துாரில் தொடர் கொலைகள்: மக்கள் அச்சம்

முதுகுளத்துாரில் தொடர் கொலைகள்: மக்கள் அச்சம்

முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் வட்டாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு காரணங்களில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.முதுகுளத்துாரில் அருகே முத்துவிஜயபுரம் கிராமத்தில் சொத்து பாகப்பிரிவினை பிரச்னையில் மாமனார் ஜேசு மருமகள் உமா 32, மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்தார். தெற்கு காக்கூரில் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்த தம்பி சிவா 26, அண்ணன் கார்த்திக் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். புழுதிகுளம் கிராமத்தில் தகராறில் ஐந்து பேர் கட்டையால் தாக்கியதில்​ கோபால்சாமி 40, கொலை செய்யப்பட்டார். கடந்த ஒரு வாரத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறு பிரச்னைகள் கூட கொலை தீர்வாகி வருவது ஏமாற்றம் அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபோன்ற குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு சிறு பிரச்னைகள் கூட கொலை கலாச்சாரம் மாற வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை