உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலம்; இன்று திருக்கல்யாணம்

சவுந்தர்ய நாயகி அம்மன் தபசு திருக்கோலம்; இன்று திருக்கல்யாணம்

நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயிலில் சவுந்தர்ய நாயகி அம்மனுக்கு இன்று(ஆக.9) ஆடிப்பூர திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று தபசு திருக்கோலம் நடந்தது.இக்கோயிலில் சவுந்தர்ய நாயகி அம்மன்தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். நேற்று காலை அம்மன் வெள்ளி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் வலம் வந்தார். இரவு 7:00 மணிக்கு நாகநாத சுவாமி பிரியாவிடையுடன் கோயில் முன்பு எழுந்தருளினார். பின்னர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.இன்று காலை 10:00 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ