உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார். இதில் திருநங்கைகள் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் அளித்தனர். 10 பேருக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.கலெக்டர் பேசுகையில், திருநங்கைகள் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கேற்ப கல்வித்தரம் உயர்த்துதல் மற்றும் அவர்களுக்குத் தேவையான அடையாள அட்டை, சுயதொழில் துவங்க மானியத்துடன் வங்கிக் கடனுதவி, முதல்வரின் காப்பீட்டுத்திட்டம், வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் தேன்மொழி, அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை