உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

மீனவர் நலவாரிய உறுப்பினராக  ஜூலை 8 முதல் சிறப்பு முகாம்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை கடலோர மீனவர் கிராமங்களில் ஜூலை 8 முதல் 12 வரை நடக்கிறது.மாவட்டத்தில் மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்ததொழில் செய்யும் அனைத்து தொழிலாளர்கள் மற்றும் மீனவர் மகளிர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள அனைவரும் தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம்.இதற்கான சிறப்பு முகாம் ஜூலை 8 முதல் 12 வரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மீனவ கிராமங்களில் நடைபெற உள்ளது.இம்முகாமில் மீனவர் கிராம சாகர்மித்ரா மற்றும் தொடர்புடைய மீனவர் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்