உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வயல்களில் ட்ரோன் பயன்படுத்தி களைக்கொல்லி மருந்து தெளிப்பு

வயல்களில் ட்ரோன் பயன்படுத்தி களைக்கொல்லி மருந்து தெளிப்பு

திருவாடானை : திருவாடானை பகுதியில் வயல்களில் களைகளைக் கட்டுப்படுத்த ட்ரோன்களை பயன்படுத்தி களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி நடக்கிறது.திருவாடானை தாலுகாவில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளது. கோடை உழவு முடிந்து விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். வயல்களில் களைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் பவர் ஸ்பிரேயர் பயன்படுத்தி வந்தனர். மருந்து தெளிப்பதற்கு அதிகம் செலவாகும் என்பதால் தற்போது ட்ரோன் மூலம் களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செங்கமடை விவசாயிகள் கூறியதாவது:களை பறிக்க கூலி ஆட்கள் சம்பளம் உயர்ந்து விட்டது. வேலை ஆட்கள் பற்றாக்குறையும் அதிகமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் முறை அதிகமாக உள்ளது. இதனால் ஆட்கள் பற்றாக்குறை, செலவு குறைவாக உள்ளது. ஏக்கருக்கு ரூ.600 வாடகை வசூல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு இது சாதகமாக உள்ளது. எனவே மருந்து தெளிக்கும் ட்ரோன் வாங்க அரசு விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும். மேலும் வேளாண் அலுவலகத்தில் ட்ரோன் வாங்கி வைத்து குறைந்த வாடகைக்கு விட வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை