மேலும் செய்திகள்
கமுதியில் பாரம்பரிய முறைப்படி மார்கழி மாத பஜனை ஊர்வலம்
3 hour(s) ago
கணிதமேதை ராமானுஜர் பிறந்த நாள் விழா
3 hour(s) ago
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்: குழந்தைகள் மகிழ்ச்சி
3 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கூரிச்சாத்த அய்யனார் கோயில் பகுதியில் உள்ள வீட்டில் கட்டுமான வேலையில் ஈடுபட்ட கொத்தனார் சாரத்திலிருந்து தவறி விழுந்து பலியானார். இழப்பீடு கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர். மதுரை செல்லுார் அகிம்சாபுரத்தை சேர்ந்தவர் கணேசன் 50. இவர் ராமநாதபுரத்தில் மணி என்ற மேஸ்திரியுடன் தங்கி 8 மாதங்களாக கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை மதுரை அகிம்சாபுரத்திலுள்ள வீட்டுக்கு சென்று வருவார். நேற்று காலை கூரிசாத்த அய்யனார் கோயில் பகுதியில் உள்ள ஒரு வீட்டு கட்டடத்தில் காலை 9:30 மணிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர் சாரத்திலிருந்து தவறிவிழுந்தார்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் பலியானார். இதையறிந்த கணேசன் மகள் செல்வமீனாள் 26, புகாரில் பஜார் போலீசார்வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கட்டட உரிமையாளர்கள் இழப்பீடு வழங்க கோரி கணேசன் உடலை வாங்க மறுத்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago