உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / டவுன் பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்

டவுன் பஸ் படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்

பரமக்குடி, : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்று வரும் அனைத்து டவுன் பஸ்களிலும் கூட்டம் அலைமோதும் நிலையில் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்ய நேர்வதால் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.பரமக்குடி பணிமனையில் இருந்து 80க்கும் மேற்பட்ட அரசு டவுன் பஸ் மற்றும் தொலைதுார பஸ்கள் இயக்கப்படுகிறது. நயினார்கோவில், போகலுார், பரமக்குடி ஒன்றியப்பகுதிகள் உட்பட கமுதி, முதுகுளத்துார், இளையான்குடி என பல்வேறு ஊர்களுக்கும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.வர்த்தகம், கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் என அனைத்து தேவைகளுக்கும் பரமக்குடி பிரதான இடமாக விளங்குகிறது. இதனால் அதிகளவில் கிராம மக்கள் பரமக்குடிக்கு வரும் நிலை உள்ளது.இதனால் விசேஷ நாட்கள் உட்பட சாதாரண நாட்களிலும் காலை, மாலை நேரங்களில் டவுன் பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பெரும்பாலும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் படிக்கட்டு பயணம் தவிர்க்க முடியாததாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை போக்குவரத்து துறையினர் மற்றும் போலீசார் எச்சரித்தனர். ஆனால் தொடர்ந்து பஸ்களின் பற்றாக்குறையால் படிக்கட்டு பயணம் தவிர்க்க முடியாததாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.எனவே விசேஷ நாட்கள் உட்பட அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் ஏறி, இறங்கும் வழித்தடத்தை கண்டறிந்து கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்