உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரத்தை குளிர்வித்த கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மிதமான மழை பெய்ததால் சாலையில் மழை நீர் தேங்கியது.தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், நேற்று காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் மிதமான மழை பெய்தது.இதனால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகே தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது.இந்த மழையால் கோடை வெயிலில் சுட்டெரித்த ராமேஸ்வரம் பகுதி 'குளுகுளு' என இருந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ராமேஸ்வரத்தில் போதுமான கோடை மழை இல்லாததால் கிணறு, குளங்களில் தண்ணீர் வறண்டு வருகிறது. இதனால் இங்குள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை