உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தமிழகம், புதுச்சேரி கடற்கரையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்

தமிழகம், புதுச்சேரி கடற்கரையில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல்

ராமநாதபுரம்:-தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் 'சாகர் கவாச்' என்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் பயங்கரவாதிகள் போல் வேடமணிந்து வந்த கடற்படை வீரர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்த டம்மி வெடி குண்டுகளை பறிமுதல் செய்தனர்.கடலோர மற்றும் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய கடற்படை, கடலோர பாதுகாப்பு படை, மரைன் போலீசார் இணைந்து கூட்டாக பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். கடற்படை வீரர்கள் பயங்கரவாதிகள் போல் கடற்கரையில் ஊடுருவ முயற்சித்தனர். இவர்களை மரைன் போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமேஸ்வரம், தொண்டி, வேதாரண்யம், நாகப்பட்டினம், கடலுார், சென்னை, புதுச்சேரி கடற்கரைப்பகுதிகளில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.ராமநாதபுரத்தில் வாலிநோக்கம், ஏர்வாடி, மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம், தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மரைன் போலீசார் மீனவர்களின் படகுகளில் இருந்த பொருட்கள், அடையாள அட்டையை சோதனை செய்யதனர். ராமநாதபுரம் பகுதியில் 12 கடலோர காவல் படையினர் ஊடுருவ முயன்றனர். இவர்களை மரைன் இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் ராமேஸ்வரம் கடற்கரையில் விசைப்படகுகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் வேடமணிந்த 6 பேரை கைது செய்தனர். தனுஷ்கோடி பகுதியில் ஊடுருவ முயன்ற 6 பேரை ஆற்றாங்கரை எஸ்.ஐ.,க்கள் தாரிக், யாசர்மவுலானா கைது செய்தனர். இவர்களிடமிருந்த டம்மி வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சாகர் கவாச் ஒத்திகை இன்று (ஜூன் 20) மாலை 6:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை