மேலும் செய்திகள்
78வது சுதந்திர தின விழா; கோலாகலமாக கொண்டாட்டம்
16-Aug-2024
ராமநாதபுரம்:ராமநாதபுரம் புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர். சாரண சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் சிவா செல்வராஜ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சோமசுந்தரம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சபீனா அம்மாள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் (பொ) ரங்கநாயகி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் கருப்பையா, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.*ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கணேசபாண்டியன் தலைமை வகித்தார். உதவி தலைமையாசிரியர் ராஜேஷ், ஆசிரியர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகள் வழங்கப்பட்டது.நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, தேசிய பசுமை படை, இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
16-Aug-2024