உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தலைமறைவானவர் 14 ஆண்டுக்கு பின் போலீசில் சிக்கினார்

தலைமறைவானவர் 14 ஆண்டுக்கு பின் போலீசில் சிக்கினார்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து இலங்கைக்கு டீசல், அலுமினிய தகடுகள் கடத்தல் வழக்கில், 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.தொண்டி கடற்கரையிலிருந்து, 2008ல் படகு இன்ஜின், டீசல், அலுமினிய தகடுகளை படகில் இலங்கைக்கு கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.போலீசார், தொண்டி முருகன், 32, மதுரை பரமேஸ்வரி, 35, சாயல்குடி கல்யாணகுமார், 31, தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் வீரப்பன், 48, ஆகியோரை கைது செய்து படகு உள்ளிட்ட கடத்தல் பொருட்களை திருவாடானை கோர்ட்டில் ஒப்படைத்தனர். இதில் ஜாமினில் வெளியே வந்த ராஜேஸ்வரி, வீரப்பன் இருவரும், 2010 முதல் தலைமறைவாகினர். ராஜேஸ்வரி ஒரு மாதத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார். தொண்டி எஸ்.எஸ்.ஐ., ராம்குமார் தலைமையிலான போலீசார், வீரப்பனை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ