உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தல் வாக்குறுதியை மீண்டும் அளித்த எம்.பி., 

தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தல் வாக்குறுதியை மீண்டும் அளித்த எம்.பி., 

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்.பி., தி.மு.க., கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது தேர்தல் அறிக்கையில் கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளையே மீண்டும் அளித்துள்ளார்.நவாஸ்கனி எம்.பி., நேற்று முன்தினம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் வழக்கமான கச்சத்தீவை குத்தகைக்கு பெறுவோம். மீனவர்கள் அமைதியான முறையில் மீன் பிடிக்க இந்திய- இலங்கை மீனவர்கள் கார்ப்பரேஷன் அமைக்கப்படும். புதிய ரயில் உட்பட சென்னைக்கு பகல் நேர ரயில் விடப்படும். உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம் அமைக்கப்படும். மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கப்படும். தென்னை, பனை சார்ந்த துணை பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படும், அனைவருக்கும் குடிநீர் வசதி செய்யப்படும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் ரயில் போக்குவரத்து துவக்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை மீண்டும் அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை