உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சமாதான கூட்டம் தோல்வி

சமாதான கூட்டம் தோல்வி

திருவாடானை: இரு கிராமங்களிடையே ஏற்பட்ட எல்லை பிரச்னை சம்பந்தமாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.தொண்டி அருகே முள்ளிமுனை, காரங்காடு ஊராட்சிகளிடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை உள்ளது. நேற்று இது சம்பந்தமாக திருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. கூட்டத்தில் இரண்டு ஊராட்சிகளையும் சேர்ந்த முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். எல்லை சம்பந்தமாக அதிகாரிகள் கூறிய கருத்துக்களை இரு கிராமத்தினரும் ஏற்க மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.இது சம்பந்தமாக இன்று (மே4) ராமநாதபுரத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி