உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கவனம் ஈர்க்கும் ராஜாக்கள்பாளையம் மக்கள்

எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல அதிகாரிகளுக்கான விழிப்புணர்வு கவனம் ஈர்க்கும் ராஜாக்கள்பாளையம் மக்கள்

சிக்கல்: சிக்கல் ஊராட்சி ராஜாக்கள்பாளையத்தில் 2000 மக்களுக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். அரசு உயர் அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக கிராம நிர்வாகிகள் சார்பில் பெரிய பிளக்ஸ் ஒன்றை அச்சடித்து வைத்துள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:ஊராட்சியில் குளியல் தொட்டி கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பயனற்று உள்ளது. விரைவில் மின் மோட்டார் பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இரண்டு ஆண்டுகளாக படித்துறை கட்டப்படாததால் காலம் தாழ்த்தாமல் விரைவில் கட்டித் தரப்படுமா.வீடுகள் தோறும் குடிநீர் குழாய் அமைத்து தர முன்வருவார்களா. தெருவில் தேங்கும் கழிவு நீரால் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. மழை நீர் தேங்காமல் இருக்க கழிவு நீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா. ஏர்வாடி மருச்சுக்கட்டி முதல் சிக்கல் வரை ராஜாக்கள்பாளையம் தார் ரோட்டை அகலப்படுத்தியும் ஒரு டவுன் பஸ் மட்டுமே காலை, மாலை இயங்குகிறது. கூடுதலாக மதியம் நேரத்தில் பஸ் இயக்கினால் மக்களுக்கு பயனளிக்கும். இதை எல்லாம் அதிகாரிகள் கண்டு கொள்வார்களா. எங்கள் கோரிக்கைகளுக்கு வரக்கூடிய லோக்சபா தேர்தலுக்குப் பிறகாவது அதிகாரிகள் மனது வைப்பார்களா என எழுதியதோடு.. 'எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ