உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சிக்கலில் பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு குடிநீர் வசதி இல்லை

சிக்கலில் பயணியர் நிழற்குடை ஆக்கிரமிப்பு குடிநீர் வசதி இல்லை

சிக்கல்: சிக்கல் நகர் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை செல்கிறது.வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருபுறமும் கடந்த 2011ல் கடலாடி யூனியன் சார்பில் இரும்பு கூரையால் வேயப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது.கொளுத்தும் கோடை வெயிலால் பஸ்சிற்காக காத்திருப்போர் ஒதுங்க கூட இடம் இல்லாத அளவிற்கு பயணியர் நிழற்குடையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளது. இதனால் வேறு வழியின்றி வெயிலிலும் அருகே உள்ள கடையிலும் பொதுமக்கள் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் அப்பகுதியில் வெளிச்சமின்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.கடந்த பல ஆண்டுகளாக இரண்டு பயணியர் நிழற்குடையிலும் பெயின்ட் உள்ளிட்ட வண்ணம் பூசாமல் பொலிவிழந்தும், சேதமடைந்தும் உள்ளது.எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகம் பயணிகளுக்கான இருக்கைகள் மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு குடிநீர் வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்