உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு

மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிய ரோடு

முதுகுளத்துார்: முதுகுளத்துார் கொன்னையடி விநாயகர் தெருவில் மழைநீர் செல்ல வழியில்லாமல் தெருவில் தேங்கி ரோடு சேறும் சகதியுமாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.பேரூராட்சி 1வது வார்டு கொன்னையடி விநாயகர் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவுநீர் ரோட்டோரங்களில் ஆங்காங்கே குளம்போல் தேங்கியுள்ளது. மழை பெய்தால் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்கு முன்பு தெருக்களில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடந்த பருவமழை காலத்தில் தேங்கிய மழைநீரை மோட்டார் வைத்து வெளியேற்றினர். பின் ரோட்டில் கிராவல் மண் கொட்டி சமன் செய்தனர். தற்போது பெய்த மழைக்கு மழைநீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. ரோடும் சேறும் சகதியுமாக மாறி இருப்பதால் இவ்வழியே நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கொன்னையடி விநாயகர் தெருவில் புதிய ரோடு அமைக்கவும், மழைநீர், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை