உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோயில்களில் ஆன்மிக   புத்தக நிலையம் அமைக்கும் பணி 

கோயில்களில் ஆன்மிக   புத்தக நிலையம் அமைக்கும் பணி 

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் கோயில்களில் அரசு உத்தரவின்படி புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் ஆன்மிக புத்தக நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரத்தில் சமஸ்தானத்திற்கு சொந்தமான மூன்று கோயில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.சமஸ்தான கோயில்களின் நிர்வாகியான திவான் பழனிவேல் பாண்டியன் தெரிவித்ததாவது: தமிழகத்தில் உள்ள ஹிந்து கோயில்களில் ஆன்மிக புத்தக நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சமஸ்தானத்திற்கு சொந்தமான உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி சமேத மங்களேஸ்வரர் சுவாமி கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி கோயில், திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயில் ஆகிய இடங்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.இங்கு ஆன்மிக புத்தகங்கள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை