உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு

மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு

முதுகுளத்துார்: ராமநாதபுரம் லோக்சபா தேர்தல் முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடி மைய அலுவலகளுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு முதுகுளத்துார் சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பில் பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தேகங்கள் ஏதேனும் இருப்பினும் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்த பயிற்சி வகுப்பு நடந்தது. ஓட்டுப்பதிவு தொடர்பான படிவங்களை பூர்த்தி செய்வது சந்தேகங்கள் இருந்தால் மண்டல அலுவலர்கள், தேர்தல் தொடர்பான அலுவலரிடம் பேசி சரிசெய்து ஓட்டுப்பதிவு சிறப்பாக நடத்தி முடித்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து, தாசில்தார் சடையாண்டி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி