மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
1 hour(s) ago
ஓவிய கண்காட்சி
1 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
1 hour(s) ago
ரத்ததான தினம் உறுதிமொழி ஏற்பு
1 hour(s) ago
பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மார்ச் 25 பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடக்க உள்ளது.மதுரை அழகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் நடப்பது வழக்கம். அதேபோல் அழகர் கோயிலில் நடைபெறும் அனைத்து உற்ஸவங்களும், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கிறது.இந்நிலையில் மார்ச் 24ல் இரவு 7:00 மணிக்கு அனுக்கையுடன் திருக்கல்யாண விழா துவங்குகிறது. மார்ச் 25 காலை 9:00 மணி முதல் 10:15 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயாருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.அன்று துவங்கி தினமும் ஊஞ்சல் சேவையில் சுவாமி, தாயார் அருள்பாலிக்கின்றனர். மார்ச் 28ல் மாற்று திருக்கோலமும், மார்ச் 29 காலை அபிஷேகம் நடக்கிறது.அன்று இரவு 8:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாள் பூப்பல்லக்கில் வீதி வலம் வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago