உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அரசு ஏசி பஸ் - கார் மோதலில் மூவர் பலி

அரசு ஏசி பஸ் - கார் மோதலில் மூவர் பலி

ராமநாதபுரம்:அரசு 'ஏசி' பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், கார் டிரைவர் உட்பட மூன்று பேர் பலியாகினர்.ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு அரசு ஏசி பஸ்சை, திருமங்கலத்தை சேர்ந்த டிரைவர் சிவபாண்டி, 40, நேற்று காலை ஓட்டிச் சென்றார். எதிரில், ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஒப்பந்ததாரர் குத்தாலிங்கம், 49, பணியாளர்கள் விருதுநகர் மாவட்டம், காடனேரியை சேர்ந்த சின்ன முனியாண்டி, 27, கருமலை, 35, ஆகியோர் காரில் வந்தனர்.காரை, மதுரை சொக்கலிங்கம் நகரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், 55, ஓட்டினார். ராமநாதபுரம், சேதுபதி அரசு கல்லுாரி அருகே காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில், குத்தாலிங்கம், ராதாகிருஷ்ணன், சின்ன முனியாண்டி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.கருமலை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகாலையில் புறப்பட்டு வந்தததால், கார் டிரைவர் துாக்கத்தில் பஸ் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்த போலீசார், பஸ் டிரைவர் சிவபாண்டியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை