உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கையில் ஆக்கிரமிப்பு கடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி

உத்தரகோசமங்கையில் ஆக்கிரமிப்பு கடையால் சுற்றுலாப் பயணிகள் அவதி

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.கோயிலுக்கு அருகே பரந்த நிழல் தரும் அத்திமரம் உள்ளது. இதன் அருகே ஏராளமான டூவீலர்கள் நிறுத்தும் ஸ்டாண்டாக மாறி வருகிறது. வெளியூர் சுற்றுலாப் பயணிகள் நிறுத்தக்கூடிய இடங்களில் ஆக்கிரமிப்பு கடைகளால் அடிக்கடி அப்பகுதியில் பிரச்னை ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கும் ஆக்கிரமிப்பு கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. காலணி பாதுகாப்பு கூடம் இல்லாத நிலை உள்ளது.பக்தர்களின் வசதிக்காக காலணி பாதுகாப்பு கூடம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். எனவே குறைகளை நிவர்த்தி செய்ய நிர்வாகத்தினர் முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை