உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி

சுற்றுலா பயணிகள் ஆபத்தான செல்பி

ராமேஸ்வரம்:-தனுஷ்கோடி அரிச்சல்முனையில் பாறாங்கற்கள் மீது நின்று சுற்றுலாப் பயணிகள் ஆபத்தான செல்பி எடுப்பதால் விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது.தனுஷ்கோடியில் 1964ல் தாக்கிய புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே கட்டடங்கள் மற்றும் அரிச்சல்முனையில் கடல் அலையை கண்டு ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதில் அரிச்சல்முனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானாவை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க சுற்றி பாறாங்கற்கள் கொட்டப்பட்டுள்ளன.இந்த பாறாங்கற்களை சுற்றிலும் அதிக நீரோட்டத்துடன் கடல் அலைகள் செல்வதால் சுற்றுலாப் பயணிகள் இறங்கி குளிக்கவோ, விளையாடவோ போலீசார் தடை விதித்துள்ளனர்.இதனை பொருட்படுத்தாமல் ரவுண்டானாவை சுற்றியுள்ள பாறாங்கற்கள் மீது சுற்றுலாப் பயணிகள் நின்றபடி அலைபேசியில் செல்பி எடுக்கின்றனர். பாறாங்கற்களில் இடறி கடலில் விழும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் தெரியாமல் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை