உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை துவங்க வர்த்தகர் சங்கம் கோரிக்கை 

ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவை துவங்க வர்த்தகர் சங்கம் கோரிக்கை 

ராமநாதபுரம், : ராமேஸ்வரம் பகுதிக்கு புதிய ரயில் சேவைகளை துவக்க வேண்டும் என்று ராமநாதபுரம் வர்த்தகர் சங்க செயலாளர்கோவிந்தராஜன் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:திருச்சி--ராமேஸ்வரத்திற்கு மாலை நேர எக்ஸ்பிரஸ் ரயில், ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு பகல் நேரத்தில் தினமும் ரயில் இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திலிருந்து ஈரோடு, ஈரோட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வாரத்திற்கு இரண்டு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.ராமேஸ்வரத்திலிருந்து தேனிக்கு பாசஞ்சர் ரயில், ராமேஸ்வரத்திலிருந்து கொல்லம், பாலக்காடு பகுதிகளுக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும். ரயில்வே நிர்வாகத்தினர் ஆன்மிக புனித ஸ்தலங்கள் இருப்பதால் மக்கள் அதிகமாக ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் வகையில் இந்த புதிய ரயில்களை இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை