உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காரைக்குடியில் போக்குவரத்து மாற்றம்; திருவாடானையில் பயணிகள் அவதி

காரைக்குடியில் போக்குவரத்து மாற்றம்; திருவாடானையில் பயணிகள் அவதி

திருவாடானை : காரைக்குடியில் போக்குவரத்து மாற்றத்தால் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வர்த்தக ரீதியாகவும், பல்வேறு வேலையாக செல்கின்றனர். இங்கிருந்து செல்லும் அனைத்து பஸ்களும் நடராஜா தியேட்டர், ஆனந்தமடம், பஸ்ட் பீட், கழனிவாசல், வாட்டர் டேங்க், எல்.ஐ.சி., போன்ற ஸ்டாப்புகள் வழியாக புது பஸ்ஸ்டாண்டிற்கு செல்வது வழக்கம். சில நாட்களாக இந்த வழியாக பஸ்கள் செல்லாமல் நடராஜர் தியேட்டர் முன்பாக செல்லும் ரோட்டில் புது பஸ்ஸ்டாண்டிற்கு செல்வதால் பயணிகள் இந்த ஸ்டாப்புகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது: திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் மக்கள் வர்த்தக ரீதியாகவும், வீட்டு விழாக்களுக்கு பொருட்கள் வாங்கவும் ஏராளாமானோர் செல்கிறார்கள். போக்குவரத்து மாற்றத்தால் இந்த ஸ்டாப்புகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகிறோம் என்றனர். போக்குவரத்து அலுவலர்கள் கூறுகையில், ஆனந்தமடம் அருகே பாலம் வேலை நடப்பதால் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது. சரி செய்தவுடன் பஸ்கள் வழக்கம் போல் செல்லும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை