உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி

மாணவர்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி

கமுதி: கமுதி அருகே பேரையூரில் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் ட்ரோன் கருவி மூலம் மருந்து தெளிப்பது குறித்து பயிற்சி வகுப்பு நடந்தது.தலைவர் அகமதுயாசின் தலைமை வகித்தார். முதல்வர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். பிளான்ட் ஹாட்ஸ்பாட் ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் வேளாண் பட்டதாரிகள் யோகேஸ்வரன், பிரபாகரன் கல்லுாரி வளாகத்தில் ட்ரோன் பறக்கவிட்டு மருந்து தெளிக்கும் முறை குறித்து விளக்கினர். அவர்கள் கூறியதாவது:மருந்து மற்றும் திரவ நிலையில் உள்ள உரங்கள் தெளிப்பதன் மூலம் செலவு மிகவும் குறைவு. குறைந்த நேரத்திலேயே அதிக பரப்பளவு உள்ள வேளாண் நிலங்களில் ஸ்பிரே மூலம் மருந்து தெளிக்க முடியும். ஒரு ஏக்கர் நிலத்தில் 10-, அல்லது 15 நிமிடங்களில் தெளிக்க முடியும்.களை பறிக்க, மருந்து தெளிக்க கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ள இடங்களில் இந்த தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு மிகவும் லாபகரமானது. பாதுகாப்பானது. விவசாயிகள் தங்கள் மீது மேல்மருந்து படாதவாறு தங்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம், என்றனர். இந்த பயிற்சியில் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை