உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலத்தால் சிரமம்

ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள சீமைக் கருவேலத்தால் சிரமம்

முதுகுளத்துார் : முதுகுளததுார் அருகே மொ.கடம்பன்குளம் கிராமத்திற்கு செல்லும் ரோட்டோரத்தில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துார் அருகே மொ.கடம்பன்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்தார்- -அபிராமம் ரோடு மொ.கடம்பன்குளம் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டது.இந்த கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள், அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பொதுமக்கள் 3 கி.மீ., நடந்து வந்து பஸ்சில் செல்கின்றனர். அவசர நேரத்தில் டூவீலர், சரக்கு வாகனகளில் கிராம மக்கள் செல்கின்றனர்.இந்நிலையில் புதிதாக அமைக்கப்பட்ட ரோட்டோரத்தில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அடர்ந்து வளர்ந்துள்ளது. வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது சிறு காயங்களும் ஏற்படுகிறது.எனவே ரோட்டோரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை