உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள்  கண்டக்டர்கள் நியமிக்க  அரசு முடிவு  தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள்  கண்டக்டர்கள் நியமிக்க  அரசு முடிவு  தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு

ராமநாதபுரம் : -தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி நியமனம் செய்வதற்குசி.ஐ.டி.யு., தொழிற்சங்க காரைக்குடி மண்டல மத்திய சங்க பொதுச்செயலாளர் தெய்வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். போராட்டங்கள் நடத்தப்போவதாகவும் கூறினார். அவர் கூறியதாவது:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள், கண்டக்டர்கள் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம்.தமிழ அரசு போக்குவரத்துக்கழகத்தில் திருநெல்வேலி கோட்டம் சார்பில் டிரைவர்கள், கண்டக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய ஜூன் 16ல் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவானது இட ஒதுக்கீட்டு கொள்கைக்கும், சமூக நீதிக்கும் எதிரானது.தொழிலாளர்களுக்கு எந்த வித சலுகைகளும் கிடைக்காது. இதனை சி.ஐ.டி.யு., சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம். அரசின் இந்த முடிவை கண்டித்து பல போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை