உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மதுரை நான்கு வழிச்சாலையில் பராமரிக்கப்படாத மரக்கன்றுகள்

மதுரை நான்கு வழிச்சாலையில் பராமரிக்கப்படாத மரக்கன்றுகள்

பரமக்குடி, - மதுரை- பரமக்குடி நான்கு வழிச் சாலை ஓரங்களில் நடப்பட்ட மரக்கன்றுகள் பராமரிக்கப்படாத சூழல் உள்ளதால் அவற்றை பராமரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரையிலிருந்து பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடந்தது. அப்போது ரோட்டோரம் இருந்த பல ஆயிரம் மரங்கள் வெட்டப்பட்டு விரிவுபடுத்தும் பணிகள் நடந்தது.அதற்கு இணையாக 5 மடங்கு அதிகமான மரக்கன்றுகள் நடப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு வழிச்சாலையோரங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஊராட்சிகள் சார்பில் பல ஆயிரம் மரங்கள் நடப்பட்டன.இந்த மரக்கன்றுகள் குறிப்பிட்ட இடங்களில் பராமரிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சம் 10 அடி உயரம் வரை வளர்ந்துள்ளது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் பராமரிக்கப்படாததால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்லும் போது வீணடிக்கப்படுகிறது.மேலும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தேவையற்ற செடி, கொடிகள் படர்ந்து மரக்கன்றுகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது. இதனால் நிழல் தரும் மரங்கள், பல வண்ண பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் என வீணாகி வருகிறது.ஆகவே அவசர தேவை கருதி இது போன்ற மரக்கன்றுகளை பராமரிக்க போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி