உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / உத்தரகோசமங்கை அக்னி தீர்த்த தெப்பக்குளம் துார்வாரும் பணி

உத்தரகோசமங்கை அக்னி தீர்த்த தெப்பக்குளம் துார்வாரும் பணி

உத்தரகோசமங்கை : உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புராதான சிறப்பும் பெற்ற சிவாலயமாக திகழ்கிறது.மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கிறது. அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை இங்கு அமைந்துள்ளது. ஆண்டு முழுவதும் நடராஜரின் திருமேனியில் சந்தனம் பூசப்பட்டு ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் சந்தனம் படிக்களைதல் நடக்கிறது.மங்களநாதர் சுவாமி சன்னதி அருகே நுழைவு வாயில் பகுதியில் 3 ஏக்கரில் அக்னி தீர்த்த குளம் அமைந்துள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்த நீர் முழுவதுமாக அகற்றப்பட்டு ஐந்து அடி ஆழத்தில் உள்ள களிமண் சேறு முழுவதுமாக இயந்திரத்தின் உதவியுடன் அகற்றும் பணி நடக்கிறது.அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் உள்ள களிமண் முழுவதும் அகற்றப்பட்டு அவற்றில் அடிப்பகுதியில் துாய்மையான மணல் நிரப்பப்பட உள்ளது. அக்னி தீர்த்த தெப்பக்குளத்தை பருவ மழைக்கு முன்னதாக துார் வாரி சீரமைக்கவும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கும்பாபிஷேகம், இதர திருப்பணிகள் நடத்தப்பட உள்ளது. தற்பொழுது 60 சதவீதம் திருப்பணிகள் நிறைவடைந்துள்ளன. வருடம் முழுவதும் வற்றாத வகையில் உள்ள உவர்ப்பு தன்மை கொண்டதாக தெப்பக்குளத்தின் நீர் உள்ளது. ஆகவே இக்குளத்தில் உள்ள மீன்கள் கடல்வாழ் வகை மீன்களை சேர்ந்தவையாக உள்ளன.2015ல் முதல் முறையாக அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா நடந்தது. பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தெப்பக்குளம் கோயிலின் வலது பிரகாரத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பணிகள் நிறைவு பெற்றவுடன் தெப்பக்குளத்தில் மழை நீர் சேகரிப்பு முறையில் வடிகால் வசதி கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி