உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குப்பை கொட்டும் இடமாகிய வாலிநோக்கம் மும்முனை சந்திப்பு

குப்பை கொட்டும் இடமாகிய வாலிநோக்கம் மும்முனை சந்திப்பு

வாலிநோக்கம் : சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை வழியில் வாலிநோக்கம் மும்முனை சந்திப்பு உள்ளது.கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாலிநோக்கம் மும்முனை சந்திப்பு பகுதிகளில் அதிகளவு கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகள் பெருகி உள்ளன. கீழக்கிடாரம் ஊராட்சிக்கு உட்பட்ட வாலிநோக்கம் மும்முனை சந்திப்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிக கடைகள் உள்ளன.பிரதான ரோட்டோர பகுதிகளில் கழிவுகளை கொட்டுவதற்கு எவ்வித குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை. இதனால் ரோட்டோரங்களில் குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். வாலிநோக்கம் கிழக்கு கடற்கரை சாலை பயணியர் நிழற்குடையில் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவு நீர் ஊற்றி செல்லும் இடமாகவும் தொடர்ந்து மாறி வருவதால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் சுகாதாரக் கேட்டால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே குறைகளை நிவர்த்தி செய்ய கீழக்கிடாரம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை