உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 

வாக்காளர்களுக்கு பூத் சிலிப்  வழங்கப்படாமல் அலைக்கழிப்பு 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் பல பகுதிகளுக்கு பூத் சிலிப் வழங்காததால் வாக்காளர்கள் அலைக்கழிக்கப் பட்டுள்ளனர்.ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் ராமநாதபுரம், பரமக்குடி(தனி), திருவாடானை, முதுகுளத்துார், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டசபை உட்பட 6 தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில், 8 லட்சத்து 2 ஆயிரத்து 317 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 15 ஆயிரத்து 292 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 79 பேர் என 16 லட்சத்து 17 ஆயிரத்து 688 வாக்காளர்கள் உள்ளனர். அனைவருக்கும் அரசு தரப்பில் ஓட்டுப்போடுவதற்கான பூத் சிலிப் வழங்கப்பட வேண்டும். மாவட்டத்தல் பல இடங்களில் முறையாக பூத் சிலிப் வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப்போக்கு காரணமாக வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ