உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் ரயில் இன்ஜின் நிறுத்த கூடுதல் டிராக் வசதி நிழற்குடைகள் அதிகரிக்கப்படுமா...

பரமக்குடியில் ரயில் இன்ஜின் நிறுத்த கூடுதல் டிராக் வசதி நிழற்குடைகள் அதிகரிக்கப்படுமா...

பரமக்குடி: பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் இன்ஜின்களை நிறுத்த டிராக் வசதி செய்யப்படும் நிலையில் பயணிகள் நிற்பதற்கு நிழற்குடை வசதியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை- ராமேஸ்வரம் ரயில் மார்க்கத்தில் ஆண்டிற்கு ரூ.10 கோடிக்கும் அதிக வருமானம் ஈட்டி தரும் ஸ்டேஷனாக பரமக்குடி இருக்கிறது. தற்போது மண்டபத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் நிலையில் பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பின் தொலைதுார ரயில்கள் இயக்கப்பட உள்ளன.தற்போது பரமக்குடி ரயில்வே ஸ்டேஷனில் மூன்று பிளாட்பாரங்கள் இருக்கின்றன. எனவே கூடுதலாக இன்ஜின்களை நிறுத்திக் கொள்ள வசதியாக டிராக் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் பல மாதங்களாக நடக்கும் நிலையில் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் பயணிகள் ரயில்களில் ஏறி, இறங்க வசதியாக பிளாட்பாரம்களில் நிழற்குடை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.இதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் நிலையில், பரமக்குடியில் அதிகமான மக்கள் ஏறி இறங்கும் சூழலில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை