உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்

மகளிர் உரிமைத் தொகை கேட்டு பல மாதமாக அலையும் பெண்கள்

ராமநாதபுரம் : சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த பெண்கள் மகளிர் உரிமைத் தொகை வழங்க கோரி பல மாதங்களாக தாலுகா, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார் அளித்தனர்.ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சின்ன ஏர்வாடியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.அதில், அரிசி ரேஷன் கார்டு, குடும்ப பெண்கள், கூலி வேலைக்கு செல்லும் பலருக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்க கோரி தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகத்தில் பல மாதங்களாக மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.எங்களில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை உடனடியாக வழங்க கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ