உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று மாதம் 100 நாள் வேலை சம்பளம் வழங்கவில்லை: தொழிலாளர்கள் கவலை

மூன்று மாதம் 100 நாள் வேலை சம்பளம் வழங்கவில்லை: தொழிலாளர்கள் கவலை

திருவாடானை,: ஊராட்சிகளில் நடைபெறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என தொழிலாளர்கள் குமுறுகின்றனர். கிராமங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு வாரம் ஒரு முறை சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வரவு வைக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதுபற்றி தொழிலாளர்கள் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. சம்பளம் வழங்காததால் பொங்கல், புத்தாண்டு உள்ள பண்டிகளை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. குடும்பத்தில் வறுமை நிலவுகிறது. இந்த சம்பளத்தை வைத்தே வாழ்வாதாரத்தை நடத்தி வரும் குடும்பத்தினரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. அரசு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி