உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்

மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல்

திருவாடானை; திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் மூன்று ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டது. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் வரிவசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது: வரியினங்கள் வாயிலாக வரும் வருமானம் ஊராட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதனால் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரியினங்களை பொதுமக்களிடமிருந்து வசூலிக்க ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஒலிபெருக்கி மூலமாகவும், வீடு, வீடாக சென்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் 100 சதவீதம் வரி வசூல் செய்த முள்ளிமுனை ஊராட்சி சக்கரை அழகு, முகிழ்த்தகம் ஊராட்சி செந்தில்நாதன், காரங்காடு ஊராட்சி சாந்தி ஆகிய மூன்று ஊராட்சி செயலர்கள் 100 சதவீதம் வசூல் செய்தனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 15 ஊராட்சிகளில் 50 சதவீதத்திற்கு மேல் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை