மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
7 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
7 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
7 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
7 hour(s) ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள், சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.103 கோடி கடன் உதவி வழங்கினர்.கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் 2021-22ல் ரூ.15 கோடியே 98 லட்சம், 2022-23ல் ரூ.28 கோடியே 28 லட்சம் வரை மகளிர் சுய உதவிகுழுவினருக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.103 கோடியே 18 லட்சத்திற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக துவங்கியுள்ள 3000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்.மகளிர் திட்ட அலுவலர்களால் தர மதிப்பீடு செய்யப்பட்ட குழுக்களுக்கு ஆரம்பத்தில் ரூ.3 லட்சம், பிறகு படிப்படியாக அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மீட்டர் வட்டி, நாள் வட்டி கொடுமையிலிருந்து விடுபடலாம்.எனவே மகளிர் சுய உதவிக்குழுவில் இல்லாத பெண்கள் அருகில் உள்ள தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் வழியாக புதிய மகளிர் குழு அமைத்து கடன் பெறலாம் என கலெக்டர் விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago