உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / 2 நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு

2 நாட்கள் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு

திருவாடானை: தீ பாதுகாப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்ற ஒரு முயற்சியை தீயணைப்புத் துறையினர் துவக்கியுள்ளனர். இது குறித்து திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம் கூறியதாவது: மக்களுக்கு தீயணைப்பு நிலையத்தில் அத்தியாவசிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகளை கற்பிக்கும் வகையில் 'வாருங்கள் கற்றுக்கொள்ளுங்கள்' என்ற விழிப்புணர்வு திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நிலையங்களில் உள்ள வீரர்கள் இன்று (அக்., 11) நாளை(அக்.,12) ஆகிய இரு நாட்களுக்கு காலை 10:00 முதல் 11:00 மணி வரை, மதியம் 12:00 முதல் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 முதல் 5:00 மணி வரை விழிப்புணர்வு வகுப்பு நடத்துவர். மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை